உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அறிவிக்கப்படாத மின்தடை அவதி

அறிவிக்கப்படாத மின்தடை அவதி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரவிலும், மின்சாரம் விட்டு விட்டு வந்து செல்லும் நிலையில் இருந்தது.இதனால் வீடுகளில்,பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். பகல் நேரங்களில் வர்த்தக நிறுவனங்களும் பாதிப்படைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மழைக்காலங்களில் ஏற்படும் மின் தடையை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி