உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறக்கப்படாத ஊராட்சி சேவை மையம்

திறக்கப்படாத ஊராட்சி சேவை மையம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே திருத்தேர்வளையில் கடந்த ஆட்சியின் போது பல லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்தும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில் பயனற்ற நிலையில் சேவை மைய கட்டடம் உள்ளது. இதுகுறித்து கிராமத்தார்கள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை