உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சிகளில் பயன்பாடின்றி இருக்கும் உலர் களங்கள்

ஊராட்சிகளில் பயன்பாடின்றி இருக்கும் உலர் களங்கள்

கடலாடி: கடலாடி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2023 மற்றும் 2024 ஆண்டிற்கான நிதிக் குழு திட்டத்தில் அமைக்கப்பட்ட உலர் களங்கள் பயன்பாடின்றி உள்ளன. சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக விளைவித்த பொருள்களை உலர வைப்பதற்கு பதிலாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல ஊராட்சிகளில் உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: ரூ. 3.5 லட்சத்தில் நெல், மிளகாய், மல்லி மற்றும் சிறு குறு தானியங்களை உலர வைத்து பின்னர் அவற்றை சேகரிக்கும் வகையில் உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை முறையான பராமரிப்பின்றி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் விளைவித்த பொருள்களை சாலை ஓரங்களில் உலர்த்தும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ள்து. எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க சிமென்ட் உலர் களங்களை பயன்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை