ஊராட்சிகள் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு வலியுறுத்தல்
திருவாடானை : தமிழகம் முழுவதும் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் இன்று (ஜன.5) முடிவடைகிறது. ஊராட்சிகளின் பதவிக் காலத்தை அரசு நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 2020 ஜன.6ல் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜன. 5)ல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அரசு உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவில்லை. திருவாடானை ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூறியதாவது:கொரோனா தொற்றால் ஊராட்சிகளில் இரண்டு ஆண்டுகள் கிராம வளர்ச்சி திட்டப் பணிகள் போதுமான அளவு மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். இல்லையேல் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றனர்.