உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9000 பென்ஷன் வழங்க வலியுறுத்தல்

ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9000 பென்ஷன் வழங்க வலியுறுத்தல்

திருவாடானை : ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9000 பென்ஷன் வழங்கிட இ.பி.எப்., அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவாடானையில் இ.பி.எப்., பென்ஷன்தாரர்கள் கூட்டம் நடந்தது. சிவசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் முத்துராமு, ஷாஜகான், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பென்ஷன்தாரர்கள் பங்கேற்றனர். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9000 தரவேண்டும், மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்துள்ளதை மீண்டும் அறிவிக்க வேண்டும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. ஜூலை 9ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தம், போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி