கூட்டாம்புளி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் இளையான்குடி ரோடு சாத்தமங்கலம் விலக்கிலிருந்து கூட்டாம்புளி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் லேசான மழை பெய்தாலே ரோட்டில் தண்ணீர் தேங்குவதுடன் ரோட்டோரத்தில் ஏற்படும் மண் அரிப்பாலும் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். மேலும் ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் கூட்டாம்புளி, சாத்தமங்கலம், சேத்திடல், சீனாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராமத்தினர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.