உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்

உப்பூர் கோயில் ஊருணியை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் விநாயகர் கோயில் ஊருணியை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் அருகே உள்ள ஊருணி நீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வீட்டு தேவைகளுக்கு குளத்து நீரை பயன்படுத்தி வருவதுடன் மழைக்காலத்தில் ஊருணியில் நீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இந்த ஊருணி கடந்த சில ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாததால் மண் மேடாகி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் போதிய தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊருணியை துார்வாரி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ