மேலும் செய்திகள்
100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
09-May-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சுற்றிலும் சேதமடைந்த சுற்றுச்சுவரை, சீரமைக்க பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உப்பூர், சத்திரம், மோர்ப்பண்ணை, நாகனேந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, கடலூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால், பள்ளி மைதானத்திற்குள் கால்நடைகள் சென்று வருவதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
09-May-2025