உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

சாயல்குடி: -சாயல்குடி அருகே ஒப்பிலான் ஊராட்சி எம்.ஆர். பட்டினத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை அகற்றி புதிய தொட்டி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.எம்.ஆர். பட்டினத்தில் 1995ல் கட்டப்பட்ட 15 ஆயிரம் லி., மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. இதில் தண்ணீர் ஏற்றும் போது பக்கவாட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கசிகிறது. விவசாயி ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:எம்.ஆர்.பட்டினத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காவிரி நீர் மற்றும் உள்ளூர் குடிநீர் ஏற்றப்படுகிறது. சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் விபத்து அபாயம் உள்ளது.எனவே தொட்டியை அகற்றிவிட்டு அவ்விடத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி