ரோட்டோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உரிய முறையில் அகற்ற வேண்டும்.தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வேலையின் கீழ் முறையாக பயனாளிகளுக்கு பணிகள் வழங்கி அவற்றின் மூலம் சாலையோர பள்ளங்களை சரி செய்யவும், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள கிராம சாலைகளின் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னார்வலர்கள் கூறியதாவது:ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு உரிய முறையில் வேலை திட்டங்களை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெயரளவிற்கு பார்க்கக் கூடிய திட்டங்களால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.ஆய்வுக்கு வரும் அலுவலர்களை கணக்கிட்டு காத்திருக்காமல் முறையான பணிகளை செய்வதற்கு தனி அலுவலர்கள் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.