உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜன. 31 வரை கிராமங்களில் கால்நடைகளுக்கு  தடுப்பூசி

ஜன. 31 வரை கிராமங்களில் கால்நடைகளுக்கு  தடுப்பூசி

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் இன்று (ஜன.3) முதல் ஜன.31 வரை கிராமம் வாரியாக தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.கால் காணை மற்றும் வாய் காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம், உற்பத்தி இழப்பு ஏற்படுத்துகிறது. இந்நோயால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது. எனவே கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயைக் கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் காணை மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 6--வது சுற்று ஜன.3 (இன்று) முதல் 31 வரை நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகளை ஊரில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்புதுறை மருந்தங்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை