மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சு விரட்டு
23-Sep-2024
கமுதி : கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு போட்டி நடந்தது.மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை,தேனி உட்பட பல மாவட்டங்களில் இருந்து 13 காளைகள், 150க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது.போட்டி நடந்த போது மழை பெய்தது. அப்போது கிரிக்கெட் விளையாட்டின் போது மழை பெய்தால் தார்ப்பாய் கொண்டு மைதானம் மூடப்படுவதை போல் மைதானத்தை ஈரப்பதம் ஏற்படாமல் இருக்க தார்பாய் வைத்து மூடினர்.மழை நின்ற பிறகு தார்ப்பாயை அகற்றிவிட்டு மீண்டும் போட்டி தொடர்ந்து நடந்தது. வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமத்தின் சார்பில் குத்து விளக்கு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஒரு சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
23-Sep-2024