வி.சி.க., செயற்குழு
ராமநாதபுரம் : வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூன் 14 ல் திருச்சியில் மதசார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணி நடக்கிறது.இதற்காக ராமநாதபுரம் வி.சி.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் அற்புதகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை, மாவட்ட துணை செயலாளர்கள் மீரான் முகைதீன், சுப்பிரமணியன், செய்யது யாசின் முன்னிலை வகித்தனர். திருவாடானை தொகுதி செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார்.மேலிட பொறுப்பாளர்கள் தமிழினியன், முகமதுயாசின் பங்கேற்று நோக்கம், களப்பணி குறித்து பேசினர்.