வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிப்பு
பெருநாழி: பெருநாழி அருகே தொட்டியபட்டியில் கமுதி பா.ஜ., தெற்கு ஒன்றியம் சார்பில் சுதந்திரப் போராட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226வது நினைவு தினம் அனு சரிக்கப்பட்டது. தொட்டியபட்டியில் உள்ள வீரபாண்டிய கட்ட பொம்மன் உருவச் சிலைக்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு தொட்டியபட்டி கிளை தலைவர் அய்யரப்பன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை ஒன்றிய பொருளாளர் திருமுருகன் செய்திருந்தார். கமுதி தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் நன்றி கூறினார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகம் பற்றி எடுத்துரைக்கப் பட்டது.