உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கிராம உதவியாளர் நேர்முகத்தேர்வு

 கிராம உதவியாளர் நேர்முகத்தேர்வு

கீழக்கரை: கீழக்கரை தாலுகாவில் 26 வருவாய் கிராமங்கள் உள்ளன. எக்ககுடி, பனைக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு இரண்டு கிராம நிர்வாக உதவியாளர் (தலையாரி) நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட எக்ககுடி, பனைக்குளம் ஆகிய இரு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணிபுரிய 120 பேர் மனு அளித்து இருந்தனர். அதில் 59 பேரை தேர்ந்தெடுத்து 40 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். ராமநாத புரம் மாவட்ட கோட்டாட்சியர் ஹபீப் ரகுமான், கீழக்கரை தாசில்தார் செல்லப்பா, சமூக பொறுப்பு தாசில்தார் ஜலால் முகமது, துணை தாசில்தார் ராமர், மற்றும் அலுவலர்கள் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தவர்களை பரிசீலனை செய்த னர். இறுதி முடிவை கலெக்டர் வெளியிடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை