பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில், பெருங்களூர் பகுதியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கிராமத்தை சேர்ந்த அழகுராணி கூறியதாவது: பெருங்களூர் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பட்டா இல்லாமல் வசித்து வருகிறோம். வீட்டிற்கான மின்கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தியுள்ளோம். ஆனால் தற்போது வரை பட்டா வழங்கவில்லை. இதனால் அரசின் சலுகைகள் பெற முடியவில்லை. அரசு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.