உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலம் இன்று காலை திருக்கல்யாணம்

விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலம் இன்று காலை திருக்கல்யாணம்

இன்று காலை திருக்கல்யாணம்பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்த நிலையில் இன்று(மே 8) காலை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி திக் விஜயம் நடந்தது. நேற்று காலை விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் மாலை சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்க உள்ளது. இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் பட்டிணப்பிரவேசம் வரவுள்ளனர். நாளை ரத வீதிகளில் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !