உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய மின் இணைப்பு பெறுவதற்காக 7 மாதங்களாக காத்திருப்பு: கட்டுமானப்பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி

புதிய மின் இணைப்பு பெறுவதற்காக 7 மாதங்களாக காத்திருப்பு: கட்டுமானப்பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்கம்பங்கள் இருந்தும் அதற்குரிய மின் இணைப்பு கம்பிகள், மின் மீட்டர்கள் இல்லாததால் புதிய மின் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் புதிய வீடுகள், வணிக வளாகம், பழைய கட்டங்களை புதுப்பிக்கும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்தவர்கள் ஏழு மாதங்களாக காத்திருக்கின்றனர். புதிய வீடு கட்ட நினைப்பவர்கள் அந்த இடத்தில் ஆழ்குழாய் அமைத்து பின்னர் அதில் மின் இணைப்பு பெற்று கட்டு மானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்துவர். ஆனால் புதிய மின் இணைப்பு வழங்கப் படாததால் மாவட்டம் முழுவதும் புதிய கட்டு மானப் பணிகள் அனைத்தும் பல மாதங்களாக முடங்கியுள்ளது. திருவாடானை தாலுகாவில் திருவாடானை, நகரிகாத்தான், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், ஆனந்துார் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதி மக்கள் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து அதற்கான டெபாசிட் தொகை செலுத்தி ஏழு மாதங்களாக காத்திருக்கின்றனர். இங்கு மட்டும் 100க்கும் மேற் பட்டவர்களும், மாவட்டம் முழுவதும் 1000 பேருக்கும் அதிகமாக காத்திருக் கின்றனர். இதனால் புதிய வீடு கட்டுவோர் கட்டுமானப் பணிகளை துவக்க முடி யாமல் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் அடுத்து என்ன செய்வது என புரியாமல் அதிருப்தி யில் உள்ளனர். புதிய வீடு கட்ட வங்கியில் கடன் பெற்ற நிலையில் கட்டுமானப் பணிகளை துவக்க முடியாமல் தவிக் கின்றனர். மின்வாரிய அலு வலர்கள் கூறுகையில், கடந்த பிப்., முதல் புதிய மின் இணைப்பு வழங்க வில்லை. போதுமான மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் மின் மீட்டர்கள், மின் இணைப்பு கம்பிகள் இல்லாததால் தாமதம் ஏற்படுகிறது. வீட்டிற்கு அருகில் மின்கம்பங்கள் இருந்தால் இணைப்பு வழங்கி வருகிறோம். செப்., இறுதிக்குள் மின் இணைப்பு கம்பிகள் வந்து விடும். அதன் பிறகு மின் இணைப்பு வழங்கப்படும் என்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் அரசு உடனடி யாக தலையிட்டு மின் வாரியத்தில் மின் மீட்டர்கள், இணைப்பு கம்பிகள் தட்டுப்பாடு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை