உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நீர் நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு அவசியம்

 நீர் நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு அவசியம்

திருவாடானை: நீச்சல் பழக, நீர் நிலைகளுக்கு செல்லும் சிறுவர்கள், ஆழம் தெரியாது விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க எச்சரிக்கை அறிவிப்புகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை, தொண்டியில் மழையால் அனைத்து கண்மாய்களும், ஊருணிகளும் நிரம்பியுள்ளது. அதில் நீச்சல் பழக நீர்நிலைகளைத் தேடிச் சென்று குளிப்பதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். பொழுதை கழிப்பதற்காக, அருகே உள்ள நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். ஆழம் தெரியாமல் பெண்கள், குழந்தைகள் என பலரும் தண்ணீரில் விளையாடுகின்றனர். இப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆறு பேர் இறந்துள்ளனர். எனவே ஆபத்தை உணர்த்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை