மேலும் செய்திகள்
நீர்மோர் பந்தல் திறப்பு
19-Apr-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சப் டிவிஷன் உட்பட்ட போலீசார் சார்பில் பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜான்சிராணி, இளங்கோவன்,ராஜா முன்னிலை வகித்தனர்.மோர், தர்பூசணி, தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. எஸ்.ஐ., போலீசார் பங்கேற்றனர்.
19-Apr-2025