மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் குழாய் உடைந்து ரோடு சேதம்
13-Jan-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே காவிரி குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகிறது.முதுகுளத்துார் பகுதியில் ரோட்டோரத்தில் காவிரி குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில் முதுகுளத்துார் - பரமக்குடி ரோடு கீழத்துாவல் அருகே கடந்த சில நாட்களாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. வீடுகளை சுற்றி குளம் போல் தேங்கியுள்ளது.குழாய் உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதே போன்று முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகிலும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
13-Jan-2025