உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொக்கூரணி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

கொக்கூரணி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் காவனக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கூரணியில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் மற்றும் காவனக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் மற்றும் ஊராட்சி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்யப்படாமல் உள்ளது.இதனால் அங்குள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது.இதனால் வெளியூர்களில் இருந்து டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.12 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராமத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் சப்பளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி