உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெட்டுக்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு

வெட்டுக்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சித்துார்வாடி ஊராட்சி வெட்டுக்குளம் , கண்மாய் கரை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் முறையாக சப்ளை செய்யப்படாததால் அப்பகுதியில் உள்ள ஊருணியில் தேங்கியுள்ள கலங்கலான நீரை தெளிய வைத்து குடிநீராக பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதனால் வெளியூர்களில் இருந்து டிராக்டர்களில் விற்கப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.12 கொடுத்து வாங்கும் அவல நிலையில் உள்ளனர். எனவே அதிகாரிகள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ