உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளங்கள், ஊருணிகளுக்கு நீர்வரத்து

குளங்கள், ஊருணிகளுக்கு நீர்வரத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் சிதம்பரம் ஊருணி, நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி, திரவுபதியம்மன் ஊருணி, பாம்பூருணி, வண்ணா ஊருணி, லட்சுமி ஊருணி, செம்மங்குண்டு ஊருணி என 23 ஊருணிகள் உள்ளன. கூரியூர், சக்கரகோட்டை, பட்டணம்காத்தான். சூரன்கோட்டை ஊராட்சிகளில் ஊருணிகள் உள்ளன. இதுபோக கோயில் குளங்களும் உள்ளன. இவ்வாண்டு கோடை காலத்தில் போதிய மழையின்றி குளங்கள், ஊருணிகளில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கண்ட ஊருணிகள், குளங்களுக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. எனவே இந்த தண்ணீரை முழுமையாக மக்கள் பயன்படுத்த வசதியாக நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !