உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மோட்டாரில் குடிநீர் திருட்டு அதிகாரிகளே கவனிங்க

மோட்டாரில் குடிநீர் திருட்டு அதிகாரிகளே கவனிங்க

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீரை மின் மோட்டார் பயன்படுத்தி சிலர் உறிஞ்சி எடுப்பதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுவதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இது அவ்வப்போது குழாய் சேதம், வால்வு பழுதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிலர் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி தொட்டிகளில் நிரப்புகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தாலும் ஓரிரு நாட்கள் கண்காணித்துவிட்டு அதன் பின் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்வது இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆகையால் மின் மோட்டார் வைத்து காவிரி கூட்டு குடிநீரை எடுக்கும் வீடுகள், நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி