உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / களைகட்டும் தீபாவளி விற்பனை

களைகட்டும் தீபாவளி விற்பனை

ராமநாதபுரம் : தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் பஜாரில் துணிகள், பட்டாசு வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு (அக்.20) இன்னும் ஒரு வாரமேஉள்ள நிலையில்ராமநாதபுரம் அரண்மனை, சாலை பஜார், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட வணிக பகுதியில் சனிக்கிழமை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான நேற்று மதியம் முதல் மக்கள் பொருட்கள் வாங்க குவிந்தனர். வழக்கமாக உள்ள கடைகளுடன் சாலையோர துணிக் கடைகள் பல்வேறு இடங்களில் முளைத்துள்ளன. ஜி.எஸ்.டி., குறைவுக்கு பின் மக்கள் திட்டமிட்டதை விட அதிக அளவில் பொருட்களை வாங்குகின்றனர். அடுத்து வரும் நாட்களில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என வியா பாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை