முதுகுளத்துாரில் களை எடுப்பு பணி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல், சாம்பக்குளம், அப்பனேந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைகள் விதைத்துள்ளனர். தற்போது பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளது. முதுகுளத்துார் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தேரிருவேலி ஒரு சில கிராமங்களில் வயலில் அதிகளவு தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்துார் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வயலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கூலி வேலைக்கு ஆட்கள் வைத்து களை எடுத்து வருகின்றனர்.