அரசு கலைக்கல்லுாரியில் பளுதுாக்கும் போட்டி
பரமக்குடி: - பரமக்குடி அரசு கலை கல்லுாரியில் 2025 --- 26ம் கல்வி ஆண்டிற்கான அழகப்பா பல்கலை இடையிலான பளு துாக்கும் போட்டிகள் நடந்தது. முதல்வர் ராஜா தலைமை வகித்தார். மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குநர் பிரசாத் வரவேற்றார். பல்கலை உடற்கல்வி இயக்குநர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் மணிமுத்து பரிசுகளை வழங்கினர். பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் 60 கிலோ எடை பிரிவில் சூரிய நாராயணன், 65 கிலோ பிரிவில் சதீஷ்குமார், 71 கிலோ பிரிவில் கண்ணன், 79 கிலோ பிரிவில் முருகன் உள்ளிட்டோர் முதலிடம் பெற்றனர். பெண்கள் 48 கிலோ பிரிவில் தேஜா, 53 கிலோ பிரிவில் ரூபிணி முதலிடம், அரசு மகளிர் கல்லுாரி மாணவி ஷாலினி 2ம் இடம் பெற்றனர். 58 கிலோ பிரிவில் துர்கா தேவி 2ம் இடம், 63 கிலோ பிரிவில் ஸ்ரீதேவி முதலிடம், அரசு மகளிர் கல்லுாரி மாணவி கிருஷ்ணவேனி 2ம் இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்தனர். போட்டிகளில் காரைக்குடி, ராமநாதபுரம், தேவகோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லுாரிகள் பங்கேற்றன.