உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சித்த மருத்துவமனை கட்டடம்  பயன்பாட்டிற்கு எப்போது  வரும்

சித்த மருத்துவமனை கட்டடம்  பயன்பாட்டிற்கு எப்போது  வரும்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவப்பிரிவு கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப்பிரிவுக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. ஆனால் இன்று வரை சித்த மருத்துவப்பிரிவு இன்னும் சேதமடைந்த பழைய கட்டடத்தில் தான் செயல்படுகிறது. இதனால் நோயாளிகள் இந்தப்பகுதிக்கு வருவதற்கே அச்சமடையும் அளவிற்கு சுகாதாரக்கேடாக மாறியுள்ளது. புதிய கட்டடத்தின் முன்பும் இதே நிலை தான் நீடிக்கிறது. இந்தப்பகுதியை சுத்தம் செய்து சுகாதாரம் பாதுகாக்க வேண்டும்.சித்த மருத்துவ புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்