உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோரிக்கைகளை பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும்

கோரிக்கைகளை பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும்

ராமநாதபுரம்,:தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிறுவனத் தலைவர் க.கிருஷ்ணன் ராமநாதபுரத்தில் கூறியாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உயர்த்த வேண்டும். இக்கோரிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ