கணவர் இறந்த கவலை மனைவி தற்கொலை
தொண்டி: தொண்டி புதுக்குடியை சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி காளிபொட்டு 45. மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர். இரு மகன்கள் உள்ளனர். இரண்டு மாதத்திற்கு முன்பு முத்துமாணிக்கம் நெஞ்சுவலியால் இறந்தார். கணவர் இறந்ததால் காளி பொட்டு கவலையுடன் இருந்தார். இந்நிலையில் காளி பொட்டு நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.