பயன்பாடின்றி வயலில் கிடக்கும் பேரிகார்டுகள் பாதுகாக்கப்படுமா
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி ஊராட்சியில் கொத்தங்குளம் செல்லும் வழியில் வயல் வெளியில் பேரிகார்டுகள் பயன்பாடின்றி கிடப்பதால் அவற்றை பயன்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழாக்காலங்களில் போக்குவரத்தை சரி செய்யவும், வேகத்தடைகளுக்கு முன்பு எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பேரிகார்டுகள் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் எக்ககுடி ஊராட்சியில் இருந்து கொத்தங்குளம் செல்லும் வழியில் வயல் வெளியில் உள்ள நீரில் இரு பேரிகார்டுகள் கிடக்கின்றன. எனவே பேரிகார்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.