மான்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யுமா வனத்துறை
சாயல்குடி : சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகளில் வாழும் மான்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் வனத்துறை தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.சாயல்குடி மற்றும் கடலாடி பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டிய ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் புள்ளி மான்கள், முயல்கள், நரி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது கோடை வெயிலால் பெரும்பாலான ஊருணி, நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. சாயல்குடி வனச்சரகம் சார்பில் புள்ளி மான்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் வசிக்கும் இடங்களை கண்டறிந்து தண்ணீர் தொட்டிகள், பண்ணைக் குட்டைகளை அமைத்தால் புள்ளி மான்கள் கிராமங்களில் தண்ணீர் தேடி வருவது குறையும்.எனவே சாயல்குடி வனச்சரகத்தில் புள்ளி மான்களை பாதுகாக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.