உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உரிய நேரம் சிகிச்சையின்றி பாம்பு கடித்த பெண் பலி: உறவினர்கள் புகார்

உரிய நேரம் சிகிச்சையின்றி பாம்பு கடித்த பெண் பலி: உறவினர்கள் புகார்

ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்த பெண்ணிற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் மருத்துவமனை வளாகத்தில் இறந்து விட்டதாக உற வினர்கள் புகார் தெரிவித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் பாரனுார் அருகேயுள்ள அத்தானுார் கிராமத்தை சேர்ந்த நாகநாதன் மனைவி சுமதி 43. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுமதி வயல் காட்டில் நடந்து சென்ற போது பாம்பு கடித்தது. அவரை ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுமதி இறந்தார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர் இல்லாததால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்த னர். இறந்த பெண்ணின் கணவர் நாக நாதன் கூறுகையில், அதிகாலை 5:30 முதல் 6:00 மணி வரை அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து கூச்சலிட்டோம். மருத்துவமனையில் கதவை திறக்கவில்லை. அவசர சிகிச்சையளிக்க யாரும் இல்லாததால் எனது மனைவி இறந்து விட்டார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்(பொ) டாக்டர் முனீஸ்வரி கூறுகையில், பாம்பு கடித்த பெண்ணை அழைத்து வந்தவர்கள் பூட்டியுள்ள பழைய ஸ்டோர் ரூம் கதவை தட்டியுள்ளனர். அந்த சத்தம் கேட்டு கர்ப்பிணி அறையில் இருந்த டாக்டர் வந்து பார்த்த போது அந்த பெண் அழைத்து வரும் போதே இறந்து விட்டது தெரிய வந்துள்ளது. இது புரியாமல் உற வினர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை எனப் பொய் புகார் கூறுகின்றனர். சிலர் மிரட்டுகின்றனர். எங் களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !