கீழே விழுந்து பெண் காயம்
திருப்புல்லாணி: உச்சிப்புளி அருகே பெருங்குளம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 40. இவர் டூவீலரில் மனைவி நாகேஸ்வரி யுடன் 35, திருப்புல்லாணி பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் பெருங்குளம் செல்வதற்காக வண்ணாங்குண்டு ராணி மங்கம்மாள் சாலையில் சென்றனர். மதியம் 1:00 மணிக்கு எதிர் பாராமல் டூவீலரில் இருந்து கணவன், மனைவி இருவரும் தவறி விழுந்தனர். இதில் காமயடைந்த நாகேஸ்வரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.