மேலும் செய்திகள்
தாய் நகைகளை திருடிய மகன் கைது
09-Oct-2024
உச்சிபுளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே நாரையூருணியில் கவரிங் நகை அணிருந்த லட்சுமியை 55, கழுத்தை நெரித்து கொலை செய்து நகையை பறித்துச்சென்ற மாரிஸ்குமாரை 35, போலீசார் கைது செய்தனர்.நாரையூருணியை சேர்ந்த செந்துார்பாண்டி மனைவி லட்சுமி 55. கணவர் இறந்த நிலையில் மகள் பிரியாவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிரியா வேலைக்கும், பேரக்குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த லட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த கவரிங் செயினை தங்கம் என நினைத்து திருடி தப்பிச்சென்றார். உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தினர். நகைக்காக உச்சிப்புளி நாகாச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் மாரிஸ்குமார் 35 கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
09-Oct-2024