உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு முகாம்

நாளை மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நாளை மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான பெண்கள் அணி தேர்வு முகாம் காலை 8:00 மணிக்குநடக்கிறது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அணியில் பங்கேற்க2012 டிச.31 அன்றோ அதற்கு முன் பிறந்தவர்கள் அணித்தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ள பெண்கள் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் நகல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் இத்தேர்வில் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு 94431 12678 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை