உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலக புதிய கழிப்பறை பணிகள் மந்தம்

கலெக்டர் அலுவலக புதிய கழிப்பறை பணிகள் மந்தம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பூங்காவில் புதிய கழிப்பறை கட்டும் பணி ஆமை வேகத்தில் பல மாதங்களாக நடக்கிறது. பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில்திங்கள் தோறும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக கூட்ட அரங்கம் அருகேயுள்ள பூங்கா வளகாத்தில் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் சாய்தள வசதியுடன் புதிய கழிப்பறை கட்டும் பணி பல மாதங்களாக நடக்கிறது. தற்போது மின் இணைப்பு தாமதம் காரணமாக ஒரு மாதமாக அப்படியே விட்டுள்ளனர். உள்ளே கோப்பை, தண்ணீர் தொட்டி சேதமடையும் முன் புதுக்கழிப்பறை பணிகளை மீண்டும் துவங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை