உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொங்கல் பண்டிகைக்கு பனங்கிழங்கு; கிழங்குகள் பறிக்கும் தொழிலாளர்கள்

பொங்கல் பண்டிகைக்கு பனங்கிழங்கு; கிழங்குகள் பறிக்கும் தொழிலாளர்கள்

தேவிபட்டினம்; பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சாகுபடி செய்யப்பட்ட பனங்கிழங்குகளை விற்பனைக்கு தயார் செய்யும் வகையில் கிழங்குகளை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்தபடியாக பனங்கிழங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன.தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ளதை முன்னிட்டு பனை விதைகளை (கொட்டைகளை) மொத்தமாக பதியமிட்டு கிழங்கு உற்பத்தி செய்திருந்த விவசாயிகள் தற்போது அந்த கிழங்குகளை பறித்து விற்பனைக்கு தயார்படுத்தி வருகின்றனர்.தேவிபட்டினம், சித்தார்கோட்டை, இலந்தை கூட்டம், அம்மாரி, பழனிவலசை, புதுவலசை, ஆற்றங்கரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் பனங்கிழங்குகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பறித்து கிழங்குகளை தரம் பிரித்து விற்பனைக்கு தயாராகின்றனர்.மேலும் வெளி மாவட்ட வியாபாரிகள் இப்பகுதிகளில் முகாமிட்டு பனங்கிழங்குகளை கொள்முதல் செய்வதற்கு விவசாயிகளிடம் முன் தொகை கொடுத்து ஆர்டர் செய்து வருகின்றனர்.இதனால் பனங்கிழங்கு சாகுபடி செய்திருந்த விவசாயிகள் கிழங்குகளை பறித்து விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ