உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிலாளர் நலத்துறை புதிய அலுவலகத்தை ஜன.27 தொழிலாளர்கள் திறக்கும் போராட்டம்

தொழிலாளர் நலத்துறை புதிய அலுவலகத்தை ஜன.27 தொழிலாளர்கள் திறக்கும் போராட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ரூ.4 கோடியில் கட்டப்பட்டு பலமாதங்களாகியும் திறக்கப்படாத தொழிலாளர்நலத்துறை அலுவலகத்தினை ஜன., 27 ல் தொழிலாளர்கள் திறக்கும் போராட்டம் அறிவித்துள்ளனர்.ராமநாதபுரத்தில் பட்டணம் காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே தொழிலாளர் நலத்துறை அலுவலகம் ரூ.4 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.சிவாஜி, சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாவது: தொழிலாளர் நலத்துறை அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. பழாடைந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் புதிய கட்டடம் கட்ட போராட்டம் நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இது குறித்து கலெக்டர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஜன., 27 ல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை தொழிலாளர்கள் திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: பொதுப்பணித்துறையினர் கட்டடம் கட்டி முடித்து விட்டனர். இதற்குரிய மின் இணைப்பிற்கு ஊராட்சி நிர்வாகம் சான்றிதழ் பெற தாமதம் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மின் இணைப்பு பெறப்பட்டு பணிகள் நடக்கிறது. புதிய கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ