உலக மணல் மேடுகள் பாதுகாப்பு தினம்
ராமேஸ்வரம்: உலக மணல் மேடுகள்பாதுகாப்பு தினத்தையொட்டி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நேற்று உலக மணல் மேடுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி தங்கச்சிமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருளகம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அருளகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன், ராமேஸ்வரம் தீவின் குடிநீர் ஆதாரமாக உள்ள மணல் மேடுகள், இவற்றின் இயற்கை நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி மணல் மேடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின் மாணவர்கள், பொதுமக்கள் மணல்மேடுகளை பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். விழாவில் தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ், ஆசிரியர்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.