உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம்
திருவாடானை, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நேற்று நடந்தது. மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல், நீர் வழித்தடங்களை துார்வாருதல், குழந்தைகளிடத்தில் நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் ஆய்வு செய்தார்.