உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அருகே மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி

கமுதி அருகே மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி

கமுதி : கமுதி அருகே கே.நெடுங்குளம் விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் நல்லமருது 27, என்ற இளைஞர் உயிரிழந்தார்.கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கு மக்கள் ஒருவித தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் கமுதியை சுற்றியுள்ள நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.கமுதி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்த நல்லமருது 27, மாடு வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று கமுதி அருகே கே.நெடுங்குளம் அருகே விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். நல்லமருதுக்கு திருமணம் முடிந்து மனைவி மாரீஸ்வரி, ஆறு மாத பெண் குழந்தை உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை