இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் மேரிசுஜின் வரவேற்றார். நல்லாசிரியர் கிருஷ்ண மூர்த்தி பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர் மீது கொண்ட நம்பிக்கை, எதிர்காலத்தில் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், எளிமையாக எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது குறித்து விளக்கினார். பின் அப்துல்கலாம் தாய்க்காக எழுதிய கவிதையின் காணொளி படமாக காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மாமல்லன், கஜேந்திரநாயகம் செய்தனர். உடன் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் இருந்தனர்.