உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு ஆட்டோ டிரைவர் சாவு; 2மகள்கள் சீரியஸ்

குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு ஆட்டோ டிரைவர் சாவு; 2மகள்கள் சீரியஸ்

சோளிங்கர்:சோளிங்கர் அருகே, மகள்களை துாக்கில் தொங்கவிட்ட ஆட்டோ டிரைவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த வேலம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி, 45, இவரது மனைவி இந்திரா, 41. தம்பதியரின் மகள்கள் அகல்யா, 22, சரண்யா, 17. குடும்ப வறுமையால் பல இடங்களில் ராஜி கடன் பெற்றிருந்தார்.நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதன்படி நேற்று காலை வீட்டில் ஓர் அறையில், மகள்களை துாக்கில் மாட்டிவிட்டு, மற்றொரு அறையில் தம்பதியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். அப்போது மகள்கள் துடிப்பதை பார்த்த இந்திரா கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துாக்கில் தொங்கிய இருவரையும் மயக்க நிலையில் மீட்டனர்.இந்நிலையில் மகள்களின் நிலைக்கு நானே காரணம் என கூறியபடி ஓடிய ராஜி, வாலாஜா - தண்டலம் பகுதி இடையே வந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். துாக்கில் தொங்க விடப்பட்ட இரு மகள்களும் கவலைக்கிடமான நிலையில், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை