உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / டயர் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

டயர் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

அரக்கோணம்:திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலை இச்சிபுத்துார் பகுதியில் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,342 நிரந்திர ஊழியர்கள், 3, 480 தற்காலிக ஊழியர்கள் என மொத்தம், 4,822 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில், 8 மணி நேரம் வீதம் மூன்று ஷிப்ட் அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்இதில் தற்காலிக ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு, 548 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இவர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்தும், பணிநிரந்திரம் செய்யப்படாமல் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல், தற்காலிக ஊழியர்கள் வேலையை புறக்கணித்து தொழிற்சாலை அருகே திறந்தவெளி மைதானத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கேயே ஊழியர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை