மாற்று திறனாளிக்கு நலத்திட்ட உதவி
அரக்கோணம்,:அரக்கோணம் அடுத்த சாலை ஊராட்சி கைலாசபுரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இந்த முகாமை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தியது. ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா பங்கேற்று, 182 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் 37 பேருக்கு 3.32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில், அரக்கோணம் ஆர்.டி.ஓ., பாத்திமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.