ரூ.11.50 லட்சம் புகையிலை காரில் கடத்திய 2 பேர் கைது
ராணிப்பேட்டை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு, காரில் கடத்திய, 11.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 215 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை டோல்கேட்டில், வாலாஜாபேட்டை போலீசார் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மடக்கி சோதனை செய்ததில், பெங்களூருவிலிருந்து, சென்னை தாம்பரத்திற்கு, 11.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 215 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிந்தது. இதை கடத்திய பெங்களூருவை சேர்ந்த ஹடமாத்தாசிங், 43, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிருஷா, 26, ஆகியோரை கைது செய்து, கடத்திய புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.