உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / குட்டை நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாப பலி

குட்டை நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாப பலி

ராணிப்பேட்டை: குட்டையில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரத்தை அடுத்த மேட்டு குன்னத்துாரை சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன், 7. அதே பகுதியை சேர்ந்த கோபி மகன்கள் மோனி பிரசாத், 9, சுஜன், 7. சரவணனின் விவசாய நிலத்துக்கு அருகேயுள்ள குட்டையில் குளிக்க, மூவரும் நேற்று காலை, 10:30 மணிக்கு சென்றனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். அவர்களை அங்கிருந்தோர் மீட்க முயன்றும் முடியவில்லை. பானாவரம் தீயணைப்பு துறையினர் மூவரின் சடலத்தையும் மீட்டனர். பானாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ