உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை திருட்டு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 45 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டையை சேர்ந்தவர் மோகன், 37; சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது இரண்டு வயது பெண் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பால், நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின், மனைவி, குழந்தையை, மாமியார் வீட்டில் விட்டு சென்னை சென்றார். நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள், மோகன் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு, மோகனுக்கு தகவல் தெரிவித்தனர். கவிதா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 45 சவரன் நகை, 2,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி